மிச்சிகன், கென்டக்கி, ஒஹையோ, மேற்கு வர்ஜீனியா மாநிலங்களில் பலரும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டிரம்ப்பின் ட்ரூத் சோஷியல் செய்திகளாலும், எதற்கு எப்போது வரி ஏற்றுவார் என்று தெரியாமலும் உலகமே பீதியில் வயிற்றுக்கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபக்கம். மறுபக்கம், நோய்த் தொற்றால் அமெரிக்கர்கள் நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் ‘சைக்ளோஸ்போரியோஸிஸ்’ (Cyclosporiasis) எனப்படும் சிறுகுடலைப் பாதிக்கும் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. பிரபல உணவகச் சங்கிலியான டாக்கோ பெல்லில் பரிமாறப்பட்ட ‘துண்டாக்கப்பட்ட லெட்டூஸ் தழை’ (shredded iceberg lettuce) இந்தத் தொற்றுநோய்ப் பரவலின் மையமாக இருப்பதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC), உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன.















Add Comment