சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட சராசரத்துக்கும் தெரியும். கடாஃபி உயிருடன் இருந்தவரை கேட்கவே வேண்டாம். அவர் இறந்த பிறகும் அப்படியொன்றும் ஒட்டி உறவாடும் அளவில் எதுவும் இல்லை. இந்தச் சூழலில் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. சரித்திரத்தைச் சிறிது திருப்பிப் பார்த்தால் இதன் அடிப்படைகள் சிறிது புரியும்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment