Home » நல்லது கெட்டது – 7
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 7

மூடியதா, திறந்ததா – எது சிறந்தது?

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை, அதாவது ஏஐ மாடல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது, ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி, ஆந்த்ரோபிக்கின் கிளாட், கூகுள் ஜெமினி போன்ற முன்னணி மாதிரிகள். இவை அந்தந்த நிறுவனங்களின் அறிவுசார் உடமைகள். இவை எப்படிப் பயிற்றுவிக்கப்பட்டன, இவற்றின் உள்கட்டமைப்புகள் என்ன என்பது எதுவும் வெளியிடப்படுவதில்லை அதனால் இந்த மாதிரிகளைப் பயன்படுத்த அந்தந்த நிறுவனங்களின் மேகக் கணிமையை மட்டுமே அணுக வேண்டும். அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது, சீனாவில் இருந்து வரும் டீப்சீக், அலிபாபாவின் குவென், ஃபிரான்ஸின் மிஸ்ட்ரல், அமெரிக்க என்வீடியாவின் நிமோட்ரான் போன்ற திறந்த எடை மாதிரிகள். இந்த மாதிரிகளின் முழு நிரல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவற்றை இயக்கும் தரவுகள் (வெயிட்ஸ்) பொதுவெளியில் இலவசமாகக் கிடைக்கின்றன. ஏஐ துறையில் வெயிட்ஸை அந்தந்த ஏஐ மாடல்களின் அறிவு என நினைத்துக் கொள்ளலாம். அந்தந்த மாதிரிகளின் வெயிட்ஸைத் தரவிறக்கி, நமக்குச் சொந்தமான பெரிய கணினிகளில் இயக்க முடியும். அப்படி இயக்க, அவற்றைத் தயாரித்த நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் தர வேண்டாம்.

இந்த இரண்டு வகைகளில் இருக்கும் நல்லதையும் கெட்டதையும் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!