சுடலைமாடன்
பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்ட சுடலைமாடன், பூமி முழுவதும் சுற்றி வந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இடுகாட்டில் பிறந்தவன். பெரும்பசியுடையவன். பிணங்களைத் தின்றால் மட்டுமே அவன் பசி அடங்கும். இடுகாட்டில் பிணங்களைத் தின்றுவிட்டு இலக்கில்லாமல் சுற்றித் திரிந்தான்.
அப்படிக் கேரளாவில் கோட்டக்கரையில் பேச்சிப்பாறை மலை மீது சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு தேர்த் திருவிழாவைப் பார்க்கிறான். பகவதியம்மன் தேரில் வந்து கொண்டிருந்தாள். அவள் அவனுடைய தாயைப் போல இருந்தாள்.
சுடலைமாடனுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அங்கும் இங்கும் குதித்தான். அப்படியே தாவி தேர் மீது ஏறினான். குதித்து ஆடினான். அதில் தேரின் அச்சாணி கழன்றுவிடுகிறது. தேர் ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடுகிறது.
தேரின் முன்பு நடனமாடியபடி வந்து கொண்டிருந்த தேவரடியார் பெண்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்களை அடித்துக் கொலை செய்கிறான். அங்கிருந்து பகவதியம்மன் கோவிலுக்குச் செல்கிறான்.















Add Comment