சஞ்சய் பேட்டிக்குத் தடை
ஜெயபிரகாஷ் நாராயண், இந்திரா காந்திக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதை வீக்லி பத்திரிகையில் ‘இது ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார் குஷ்வந்த் சிங். ஜே.பி.க்கு இது பற்றி நீண்டதொரு கடிதம் எழுதியதுடன், அதனைத் தனது பத்திரிகையிலும் வெளியிட்டார். குஷ்வந்த் சிங்கின் விமர்சனத்துக்கு மிக நீளமான ஒரு பதில் எழுதினார் ஜேபி. அதுவும் வீக்லியில் வெளியானது.
‘நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட சிறிதுகாலத்துக்கு வேலை நிறுத்தங்கள் கிடையாது; பள்ளிகள், கல்லூரிகள் ஒழுங்கான நடந்தன; எல்லோரும் குறித்த நேரத்துக்கு வேலைக்கு வந்தார்கள்; ரயில்கள் தாமதமின்றி இயங்கின. பொதுமக்களுக்கு நெருக்கடி நிலை காரணமாக நல்ல விஷயங்கள் பல நடக்கின்றன’ என்று நினைத்தார் குஷ்வந்த் சிங்.
திடீரென்று ஒருநாள் இந்திரா காந்தியின் செயலாளரான ஹெச்.ஒய். ஷாரதா பிரசாத்திடமிருந்து குஷ்வந்த் சிங்கிற்கு டெலிஃபோன் வந்தது. ‘பிரதமரைச் சந்திக்க உடனடியாகப் புறப்பட்டு வாருங்கள், சந்திப்பு குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம்’ என்று சொன்னார் பிரசாத்.















Add Comment