Home » பனிப் புயல் – 15
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 15

விதியை நிர்ணயிப்பது எப்படி?

4, லிட்டீனி பிரஸ்பெக்ட் (கேஜிபி தலைமையகம்),
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம்,
ரஷ்யா.

சோவியத் அதிபர் ஸ்டாலின் காலத்தில் இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட எவரும் வீடு திரும்பியதில்லை. விசாரணை என்ற பெயரில் வரவழைக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், இங்கிருந்து சைபீரியக் கூலாக்குகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கட்டாயத் தொழில்துறை முகாம்களான கூலாக்குகள், நரகத்துக்கு இணையானவை. அந்தப் பனியில் நின்று மரம் வெட்டியவர்களின் கால்கள் உறைந்து போக, மீட்க வழியில்லாமல் இறந்து போனவர்களின் எண்ணிக்கையே அதிகம். அந்நகரத்திலேயே உயரமான அந்த எட்டு மாடிக் கட்டடத்திலிருந்து பார்த்தால் சைபீரியா கூடத் தெரியும் என்று பயத்துடனும் வெறுப்புடனும் சொல்லப்பட்டது. ஸ்டாலினின் ஆட்சிக்காலம் முடிந்த பின்பும் பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்த்து வந்தார்கள்.

பதினாறு வயதான வலோத்யா, கேஜிபி தலைமையகத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்தான். அவனுக்காகவே சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததாக எண்ணி மகிழ்ந்தான். வரவேற்பு மேஜைக்குப் பின்னால் ஒரு அதிகாரி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!