174. குண்டர்களின் காங்கிரஸ்
சஞ்சய் காந்தி அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அதேநேரம், அவரது கவனம் காங்கிரஸ் கட்சியின்பால் திரும்பியது. திடீரென்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வரச்சொன்னார்.
இத்தனைக்கும் அவர் இளைஞர் காங்கிரஸில் சாதாரண உறுப்பினர் கூடக் கிடையாது. ஆனாலும் அவர் அழைத்தார் என்பதால் உடனே அனைவரும் டெல்லியில் திரண்டார்கள். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ் கூட அந்தக் கூட்டத்தில் தலையைக் காட்டினார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிகாரத் தோரணையோடு ஏகப்பட்ட ஆலோசனைகள் வழங்கினார் சஞ்சய்.
இந்திரா காந்தியின் செயலாளரான ஆர்.கே.தவான் சஞ்சய் காந்தியிடம், ‘திருமதி. காந்தியின் மகன் என்பதைவிடக் கட்சிப் பொறுப்பு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு பேசினால், இன்னும் கௌரவமாக இருக்கும். பேசாமல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகிவிடுங்கள்!’ என்று தூபம் போட்டார்.















Add Comment