177. அகில இந்திரா வானொலி!
இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவேண்டாம் என்று பி.பி.சி தலைமையகம் சொன்னதை அடுத்து, கையெழுத்துப் போட மறுத்துவிட்டார் மார்க் டுல்லி. உடனே ‘அப்படியெனில் உங்களுக்கு இங்கே வேலை இல்லை; அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!’ என்று இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. மார்க் டுல்லி லண்டனுக்குப் புறப்பட்டார்.
பி.பி.சி போலவே இன்னும் சில சர்வதேசப் பத்திரிகை நிறுவனங்கள் டெல்லியின் தணிக்கைக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்தன. பீட்டர் ஹசல்ஹர்ட் (லண்டன் டைம்ஸ்), பீட்டர் கில் (டெய்லி டெலிகிராஃப்), லோரன் ஜென்கின்ஸ் (நியூஸ் வீக்) போன்ற பல பத்திரிகையாளர்களுக்கும் 24 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டு, அவரவர்கள் ஊருக்கு பார்சல் செய்யப்பட்டார்கள்.
நியூஸ் வீக் நிருபர் லோரன் ஜென்கின்ஸ், ‘கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்பெயின் சர்வாதிகாரி ஃப்ராங்கோ முதல் சீனாவின் மாவோ வரை பலரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், எங்கேயும் இது போன்ற கடுமையான பத்திரிகைத் தணிக்கையைப் பார்க்கவில்லை’ என்று எழுதினார்.














Add Comment