190. ஜெயிக்கப் போவது யாரு?
இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வெளிவந்ததற்கும் ஒரு பின்னணி இருந்தது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் அநேகமாக மொரார்ஜி தேசாய்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்போது, தனக்கு ஜனாதிபதி பதவி தருவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார் என்று ஒரு கருத்து உலவியது.
தேர்தல் கமிஷன் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த ஜனதா கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்தது. ஜெ.பி எதிர்க்கட்சித் தலைவர்களைக் கலந்தாலோசனை செய்தார். லோக் தள் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தில் ஜனதா கட்சி வேட்பாளர்கள் அனைவரும் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனதாக் கட்சி வேட்பாளர்கள் பழைய காங்கிரஸ் கட்சியின் சின்னமான ராட்டை சுழற்றும் பெண் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதும் முடிவாயிற்று.















Add Comment