197. பழங்குடி மக்களின் பாசம்
இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர்.
இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அவர். அதேபோல இந்திரா காந்தியைக் கையைப் பிடித்து இழுத்து வாகனத்துக்குள் ஏற்றவும் கூடாது என்று சொல்லிவிட்டார்.
ஒருவழியாக அரசாங்கம் இந்திரா காந்தியை எங்கே கொண்டு செல்வது என்பதை முடிவு செய்து, கைது செய்யப் போன குழுவினருக்கு அதனைத் தெரிவித்தது.
உடனே சி.பி.ஐ மற்றும் போலிஸ் அணியினர் டெல்லியில் கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் புதிய போலிஸ் லைனில் இருக்கும் கெஜடெட் அதிகாரிகள் மெஸ்ஸுக்கு இந்திரா காந்தியை அழைத்துச் சென்றார்கள்.















Add Comment