Home » பனிப் புயல் – 3
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 3

03 – பிரிந்து சென்ற ஆடுகள்

12-செப்-1999
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டம், நியூசிலாந்து

‘தேர்தல்கள் மிக முக்கியமானவை. அவற்றுக்கு நம்பகமான மாற்று வேறெதுவும் இல்லை என்பதை மக்களுக்கு நீங்கள் புரியவைக்க வேண்டும். அதிபர் எல்ஸினிடமும் நான் இதைச் சொல்லியிருக்கிறேன். முறையான தேர்தலின் மூலமே அவரது பதவி அடுத்தவருக்குச் செல்ல வேண்டும். முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளியுங்கள். எதிர்க்கட்சியினர் உங்களைவிட சிறப்பான திட்டங்களை முன்வைக்கவில்லை என்றால், மக்கள் உங்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்’ என்றார் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த புதின், ரஷ்யாவின் நிலவரத்தைப் போட்டுடைத்தார். ‘திட்டங்கள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது. ரஷ்யாவின் அரசியல் அமைப்பு இன்னும் பக்குவமடையவில்லை. திட்டங்களுக்கெல்லாம் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தலைவர்களின் முகத்தை மட்டுமே பார்த்து வாக்களிப்பார்கள். அவரது கட்சியோ, திட்டங்களோ அவர்களுக்குப் பெரிதல்ல’ என்று யதார்த்தத்தைக் கூறினார். இரு அதிபர்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் இது. நியூசிலாந்தில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் சந்தித்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!