161. கறார் நீதிபதி
நீதிபதி சின்ஹா, “நான் தீர்ப்பு கொடுப்பதை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். அதே சமயம், அதிகாரப்பூர்வமாக தீர்ப்பு அளிக்கும்வரை அது படு ரகசியமாக இருக்கவேண்டும் என்பதிலும் கண்டிப்பாக இருந்தார்.
அன்றிலிருந்து அவர் தனிமையையே நாடினார். பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அவ்வளவு ஏன், தன் பங்களாவின் வெராண்டா பக்கம் வந்தால், அங்கே யாராவது இவரைப் பார்க்க வந்திருந்தால், அவர்களை சந்திக்க நேரிடுமே என்று அந்தப் பக்கம் போவதைக் கூடத் தவிர்த்தார்.
இந்த தனிமைப் படலம் மே 28 தொடங்கி ஜூன் 7 வரை நீடித்தது.
அவர் வழங்கும் தீர்ப்பினை தட்டச்சு செய்ய வேண்டிய அவருடைய தனிச்செயலாளரிடம், “இந்தத் தீர்ப்பு விஷயத்தில் நீயும் ரகசியம் காக்க வேண்டும். உன் மனைவியிடம் கூட இது பற்றி வாய் திறக்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார்.
ஜூன் ஏழாம் தேதி தன் தீர்ப்பினை எழுதி முடித்தார். ஏறத்தாழ அந்த சமயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்து அவருக்கு ஒரு தொலைப்பேசி வந்தது. அதை சின்ஹாவால் தவிர்க்க முடியவில்லை.















Add Comment