11 பயிற்சி
எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே ஆட்கள் இல்லாதது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
குழாயடிக்குப் போய் தட்டைக் கழுவினான். அதை வைக்க இடமின்றிச் சமையற்கட்டிற்குள் எட்டிப்பார்த்தான். ஒரு காந்திக் குல்லா மட்டும் இருந்தது.
‘எல்லோரும் எங்கே’ என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
‘கேட் பே’ என்று பதில் வந்தது. என்ன ‘பே’வோ ‘போ’வோ அட்லீஸ்ட் கேட் என்றாவது ஆங்கிலத்தில் சொன்னாயே என மனதிற்குள் குல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு, நம்மை அம்போவென விட்டுவிட்டு எல்லோரும் எங்கோ போய்விடப்போகிறார்கள் என்கிற குழந்தை பயத்துடன் வளாகத்தின் பிரதான வாயிலை நோக்கி விரைந்தான்.
Add Comment