27 நமக்கல்
நாமக்கல் என்கிற பெயர், இரண்டு முதல் நான்கு வயதுவரை சேலத்தில் இருந்த சமயத்தில் அம்மாவின் புலம்பல் மூலமாகத்தான் அறிமுகமானது. சேலத்தில் இருக்கிறோம் என்றுதான் பெயரே தவிர, ஒரு எட்டு போய் நரசிம்மரையும் நாமகிரித் தாயாரையும் பார்க்கமுடியவில்லையே என்று அவள் புலம்பாத நாளே கிடையாது.
மூன்று நான்கு வயதில் நடந்ததெல்லாம் யாருக்காவது ஞாபகம் இருக்குமா என்கிற கேள்வி எல்லோருக்குமே எழக்கூடியதுதான். ஆனால், இவனுக்கு ஒவ்வொன்றும் நினைவில் இருந்தது. வறுமை கொடியது. அதிலும் பெருங்கொடுமை இளமையில் வறுமை. சபிக்கப்பட்டவர்களுக்கு அத்தனையும் நினைவிருக்கும். அதானால்தான் எழுத வந்தோமோ என்றுகூடப் பலசமயங்களில் தோன்றும்.
அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் திருமணமாகிக் குழந்தையுடன் இருக்கிற நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற சுயபச்சாதபம் அவளைக் கடவுளிடம் கொண்டுபோய் விட்டுவிட்டது. அவளும் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டாள்.














Add Comment