வெயில் காலம் என்பது நம்ம ஊரில் ஒரு சீசன் மட்டுமே. ஆனால் அரபு நாடுகளில் வாழ்வோருக்கு அது சீசன் அல்ல. வீட்டில் நிரந்தரமாகத் தங்கி இருக்கும் ஓர் உபத்திரவ உறவினர்.
வம்பு செய்யும் உறவினரானாலும் வீட்டுக்குள் வரும் போது எப்படி வருவார்? வாய் நிறையப் புன்னகை, கை நிறைய பலகாரம், ‘உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்ற போலி அக்கறை, இவற்றோடுதானே வருவார்?
அதே மாதிரிதான் இந்த வெயிலாரும் வருடத் தொடக்கத்தில் வருவார்.
ஜனவரி மாதத்தில், ‘நான் எவ்வளவு நல்லவன் தெரியுமா?’ என்று கேட்டபடி நல்லவராக நடிப்பார். காலை நேரத்தில் கொஞ்சம் குளிர்காற்றை வீசச் செய்வார். மாலையில் இரண்டு மேகங்களை அனுப்பி, சில துளிகளை நம் மீது தூவி நன்றாக ஏமாற்றுவார்.















Add Comment