‘மேடம், ஓடிபி சொல்லுங்க.’
கீச்சுக்குரலில் கேட்ட இரகசிய எண்களைத் தடதடவென்று மொபைலில் தட்டியதும், மந்திரம் போட்டாற்போல் ஒரு வரைபடம் விரிந்தது. நகரம் கட்டங்களாகப் பரந்து கிடக்க, அதனூடாக ஒரு கோடு நீண்டு, வளைந்து இலக்கைத் தொட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தக் கோட்டை ஒழுங்காகப் பின்பற்றினால் முப்பத்தைந்து ரூபாய்ச் சில்லறை அவன் கணக்கில் சேர்ந்துவிடும்.
அவன் வண்டியின் முன்னாலிருந்த சிறு தாங்கியில் தன்னுடைய மொபைலைப் பொருத்தினான். முன்புறமிருந்த தலைக்கவசத்தை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டியபோதுதான் எதேச்சையாக அவளுடைய முகத்தைப் பார்த்தான், அதிர்ந்தான்.















Add Comment