‘தம்பிக்கு பெங்களுர்ல வேலை கிடைச்சிருக்கு. இந்த வாரம் அங்க போய் வீடு பார்க்க போறான்…’
‘அப்புறம், நம்ம ராஜேஷ் இல்ல, அவனுக்கு டைவர்ஸ். ஆகிடுச்சாம்…’
அம்மா ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தாள். ராஜேஷ் பூரணியை விவாகரத்து செய்துவிட்டானா? எத்தனை நெருக்கமான காதலர்கள், என்ன நடந்திருக்கும்?
அனுவால் அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்க முடியவில்லை. மனது. மரத்துப் போயிருந்தது. தொடர்ந்து அம்மா பேசியது எதுவும் அவளது புத்தியில் உறைக்கவில்லை. ‘அப்புறம் பேசறேன்மா’ என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவளின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.
இன்றோடு சரியாக ஆறு மாதங்கள், பன்னிரண்டு நாட்கள் ஆகின்றன. இந்த இருபது வருடத் திருமண வாழ்க்கையில் இதுதான் மிக நீண்ட இடைவெளி. அவளும் ரகுவும் அப்படி ஒன்றும் நெருக்கமான தம்பதி இல்லையென்றாலும், இப்படித் தொடர்ச்சியாக இத்தனை காலம் ரகு தள்ளியிருந்தது கிடையாது.















பாற்கட்டு
திருமணமாகி குழந்தைகள் பிறந்து மத்திய வயதில் இளமைக்கும்
முதுமைக்கும் இடையில் வாழ்க்கை நடத்தும் பெண்களின்
உணர்ச்சிப் போராட்டத்தையும் அதிலிருந்து மீள்வதற்காக
தனிமையை நாடி தாய்வீடு செல்லும் போது அங்கு ஏற்படும்
அனுபவம். தடம் மாறாமல் நிதானமாக தானே மனப்பக்கும்
அடைந்து கணவன் விமான நிலையத்தில் அழைக்க வருந்து
பெட்டியைத் தூக்க உதவ வரும்போது I can manage என்று அவள் கூறுவது
அனைத்தையும் என்று உணர்த்துவதாக கதை அருமையாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் நடராஜன்