தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே கிளம்பிவிடுவார். அல்லது சைக்கிள். வெளியூர் என்றால் மட்டும் வாகனம். எடுக்கவும் பிடிக்கவும் எவ்வளவோ ஏவலாள் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. ஆனாலும் தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்கிறார்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment