26 போனோ
வண்டியை எடுக்கப் பார்க்கையில் உதைத்து உதைத்துக் காலே போய்விட்டது. என்ன ஆயிற்று என வழிந்த வியர்வையைச் சுண்டிவிட்டுக்கொண்டபடி யோசித்தாள் சுஜாதா. இந்த ஜடை சனியன் வேறு. பார்ப்பவர்கள் நல்ல முடி என்று வாய்விட்டுப் பாராட்டினாலும் இதுபோன்ற சமயங்களில் வீணாக நீளமாய்க் கிடப்பதை வெட்டித் தூர எறிந்துவிடலாமா எனத் தோன்றுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. பிடறியை கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுக்கொண்டாள்.
‘சாரி நேற்றே பெட்ரோல் போட்டிருக்கவேண்டும். என் தவறுதான் சாரி‘ என்றதற்குமேல் என்ன செய்யமுடியும். வேறு யாராவது சொல்லியிருந்தால் கோபப்படலாம். அத்துல் என்பதால் அதற்கும் வழியில்லை. ரேலி வேலைக்காகத்தான் கேட்கிறான் எனும்போது இல்லையென்று சொல்லமுடியுமா. செய்தது தவறாகவே இருந்தாலும் பழகியவர்கள் பிடித்துப்போனவர்கள் மீது எப்படிக் கோபப்படுவது. சாரி சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கும் தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான். அப்போது அது பெரிதாகவும் படவில்லை. தள்ளிக்கொண்டு போகும்போதுதான் எல்லாவற்றின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வந்தது.














Add Comment