ஆஃப்கனிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான நிதியுதவிகளைப் பெரும்பாலான நாடுகள் நிறுத்தத் தொடங்கியுள்ளன. பெண்கள் மீதான தாலிபன்களின் அடக்குமுறையையும், மாறி வரும் உலகின் தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத தாலிபன்களின் இஸ்லாமியப் பழைமைவாதக் கடுங்கோட்பாடுகளையும் அதற்குக் காரணம் காட்டுகின்றன. இதன் விளைவாகப் பஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள் ஆஃப்கனிஸ்தானின் ஏழை எளிய மக்கள்.
அடுத்த வேளை உணவு என்பதுகூட அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரமான வார்த்தை. அடுத்த நாளாவது உணவு கிடைக்குமா என்பதே அவர்களது இப்போதைய பிரச்சினை. இந்நிலையில், உயிரோடிருக்கும் பொருட்டுத் தங்களது சின்னஞ்சிறு மகள்களை விற்றுவருகின்றன ஆஃப்கனிஸ்தானின் குடும்பங்கள்.
கோர் (Ghor) மாகாணம், வறுமையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள பகுதி. அம்மாகாணத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் உரிமையாளர், காலாவதியான ரொட்டித் துண்டுகளை விநியோகிக்கிறார். அதைப் பெறுவதற்குப் பெரும் கூட்டம் கூடுகிறது. ஒரு ரொட்டித்துண்டுக்கு ஆறு பேர் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது.
















Add Comment