Home » தண்ணீர் குடிக்கும் ப்ராம்ப்ட்கள்!
அறிவியல்-தொழில்நுட்பம்

தண்ணீர் குடிக்கும் ப்ராம்ப்ட்கள்!

நம் வாழ்வில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விலை உண்டு. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்ற கேள்விக்கான விலை, ஒருவருடைய மொத்த வாழ்நாளாகவும் இருக்கலாம். அதேபோல் ChatGPT போன்ற மாடல்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விலை உண்டு. இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது மாடல்களின் சந்தா தொகை அல்ல; அவை வேலை செய்யத் தேவைப்படும் இயற்கை வளங்களுக்கான விலை. முக்கியமாக, நீர் வளம்.

திரையில் சில நொடிகளில் தோன்றும் பதில்கள் எங்கிருந்தோ மாயமாக வருவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கணினித் திரைக்குப் பின்னால் பிரம்மாண்டமான ‘தரவு மையங்கள்’ (Data Centers) வேலை செய்துகொண்டிருக்கின்றன. இந்தத் தரவு மையங்கள் நீர் ஆதாரங்களை எந்த அளவுக்கு உறிஞ்சுகின்றன என்பது பலரும் அறியாத ஒரு கசப்பான உண்மை.

செயற்கை நுண்ணறிவின் தாகம் குறித்த ஆய்வுகள், சில அதிர்ச்சிகரமான தகவல்களை நம் முன்வைக்கின்றன. ChatGPT போன்ற மாடல்களுடனான 20 முதல் 50 உரையாடல்கள், சுமார் 500 மில்லிலிட்டர் தண்ணீரை ‘குடிக்கின்றன’.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!