ஊடல்
ஆப்பிள் கம்ப்யூட்டரின் முதல் அவதாரம் முழுமையானது அல்ல. அதைக் கடையிலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து அப்படியே பயன்படுத்த இயலாது. துறை சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் கம்ப்யூட்டர்கள் குறித்த எதுவுமே தெரியாதவர்களுக்கு இது ஒரு பெருஞ்சிக்கல்.
கம்ப்யூட்டர் திருவிழாவில் ஸ்டீவ் இணை பார்த்த சில மாடல்கள் சிறப்பானதாக இருந்தன. அழகாகவும். பயன்படுத்தவும் எளிது. குறிப்பாக SOL-20 அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
தங்களது கம்ப்யூட்டரின் அடுத்த வெர்ஷனை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என்று புரிந்துகொண்டனர் இரண்டு ஸ்டீவ்களும்.
வெர்ஷன் இரண்டின் நோக்கம் எல்லாவிதமான பயனாளர்களையும் சென்றடைவது. கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கும் பால் டெரல் சொன்னது சரிதான் என்று ஜாப்ஸ் ஒப்புக்கொண்டார்.
ஆப்பிள் கம்ப்யூட்டரின் முதல் வெர்ஷனில் தேவையான சர்க்யூட்கள் அனைத்தும் இருந்தன. சிப்களும். ஆனால் அவற்றிற்கு ஒரு சட்டை கூட இல்லை. அதில் கேபினெட் கிடையாது. பவர் கேபிள் இல்லை. கீபோர்ட் மிஸ்ஸிங்.















Add Comment