படக்கதை
கருந்திரை. அதில் பளிச்சென்று ஒளிரும் எழுத்துகள். இவ்வாறுதான் இருந்தன அன்றைய கம்ப்யூட்டர் திரைகள். இவை அனைவரையும் கவரும்படி இல்லை.
கம்ப்யூட்டர்களை இயக்க சில மந்திரச் சொற்களைக் கற்கவேண்டியிருந்தது. கமாண்ட்கள். அலிபாபாவின் குகை போல மந்திரத்திற்கு மட்டும் செவிசாய்த்தன. மொத்தத்தில் அவையறிந்தவை எண்ணும் எழுத்தும் மட்டுமே.
பர்ஸனல் கம்ப்யூட்டர்களை இந்த எழுத்துச் சிறையிலிருந்து விடுவிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ரஸ்கின்.
ஜெராக்ஸ் பார்க் (XEROX PARC) நிறுவனத்திற்கும் இவருக்கும் சில தொடர்புகள் இருந்தன. இவரது தூண்டுதலின் பேரில் ஜாப்ஸ் குழுவினர் ஜெராக்ஸ் பார்க்கைப் பார்வையிடச் சென்றனர்.
ரஸ்கின் கூறியதால் மட்டுமே செல்லவில்லை. அட்கின்ஸனும், இன்னபிற சில பொறியாளர்களும் இதில் ஆர்வமாக இருந்தனர்.














Add Comment