Home » பனிப் புயல் – 14
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 14

நான்கு நிமிட எதிரிகள்

135 பவுண்ட் பிரிவில் பங்கேற்று லெனின்கிராட் ஜூடோ சாம்பியன் பட்டத்தை வென்றான் வலோத்யா (1976). வாரத்தில் நான்கு முறை பின்லாந்து ரயில் நிலையம் வரை சென்று கற்றுக்கொண்ட அவனது. தொடர் பயிற்சிக்குக் கிடைத்த வெற்றி. அதுவும் அவனுக்குப் போதவில்லை. 316 பவுண்ட் பிரிவுக்குத் தகுதிபெற்றிருந்த சிலவா அக்குமியனோடு மோதி அவனைக் கீழே தூக்கிப்போட்டு வீழ்த்தினான். வெற்றி பெறவேண்டும் என்ற மன உறுதி, அவனது உடலுறுதியை விட வலுவானது என்று சிலவாவே ஆச்சரியப்பட்டு வலோத்யாவைப் புகழ்ந்திருக்கிறார்.

வலோத்யா போட்டிகளில் பங்குபெறுவது அம்மாவுக்குக் கவலையளித்தது, எங்கே அடிபட்டுக் கொள்வானோ என்று. ஆனாலும் அவன் கலந்துகொண்ட முதல் போட்டிக்கு அணிந்து சென்ற ஜாக்கெட்டை, அம்மா அவரது கையாலேயே தைத்துக் கொடுத்து வழியனுப்பினார். வலோத்யாவின் அடிப்படை குணங்களை ஜூடோ மாற்றவில்லை. மாறாக அவனது பலத்தைக் கொண்டே அவனை நேர்வழிப்படுத்தியது. அவனது குரு ராக்ளினும் விரைவில் இதைப் புரிந்து கொண்டார். ‘வெறும் உடல் பலத்தைக் கொண்டு வெற்றி பெறும் வீரனல்ல வலோத்யா. அவன் புத்திக் கூர்மையுள்ள சூட்டிகையான வீரன். பல்துறை வல்லவனும் கூட. யாரும் எதிர்பார்க்காததையே எப்போதும் செய்வான்’ என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!