‘பறவைகள் ஓர் அற்புதம். காரணம், அவை பூமியின் எளிய, சிறந்த வாழ்க்கை நிலையை நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன. அதை நாம் அடைய வழிகாட்டுகின்றன’ — டகவ்ளாஸ் கப்லேண்ட்
பறவைகள் மனித நலனை நிலைக்க வைக்கும் முக்கியப் பங்காளிகள். அவை மலர்ப்பூ பரப்பாளர்கள், விதைப் பரப்பாளர்கள், பூச்சிக் கட்டுப்படுத்திகள். அவற்றின் முழுமையான பங்களிப்பால்தான் பூமி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் திகழ்கிறது. பறவைகள் பெரும்பாலான உலகளாவிய சுற்றுச்சூழல்களில் காணப்படும் வேறுபட்ட உயிரினங்களாகும். அவை உலகம் முழுக்கப் பரவியிருந்து, நுணுக்கமான சமநிலையை நிலைநாட்டுகின்றன.
தமிழ்நாட்டில் வனவிலங்குக் கண்காணிப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு வனத்துறை பிப்ரவரி 14, 15ஆம் தேதிகளில் அனைத்து வனப் பிரிவுகளிலும் பறவைக் கணக்கெடுப்பை மேற்கொண்டது .பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பன்முகத்தன்மையைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் இது நடைபெறுகிறது.















Add Comment