புதுதில்லியில் நடைபெற்ற பதினெட்டாவது BRICS உச்சிமாநாட்டை இந்தியா நிறைவு செய்தது. இதில் உள்ளூர் நாணய வர்த்தகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, ஐநா சீர்திருத்தங்கள் ஆகியவற்றை இந்தியா முன்னெடுத்தது. பதினோரு உறுப்பு நாடுகளும் பத்து கூட்டாளர் நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்றன. உலகின் தென்பகுதிக்கும் வல்லரசுகளுக்கும் இடையேயான பாலமாக இந்தியாவை அடையாளம் காட்டியது இம்மாநாடு.
இந்தியாவின் திறனைச் சோதிக்கும் களமாக இம்மாநாடு அமைந்தது. தற்போதைய போர்ச்சூழலில், சவுதி அரேபியாவையும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிரிகளாகப் பார்க்கிறது இரான். இம்மூன்று நாடுகளும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. மறுபுறம், சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் மெக்கா உடன்படிக்கையில் இணைந்திருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் எல்லைப் பிரச்சினைகள் தனி. எனவே, இம்மாநாட்டை நடத்துவதைப் பெரும் சவாலாகப் பார்த்தன உலக நாடுகள்.
















Add Comment