Home » பன்னெல்லாம் தேங்காய் பன் போலாகுமா?
உணவு

பன்னெல்லாம் தேங்காய் பன் போலாகுமா?

திருமணங்கள் முடித்து ஊர் திரும்பும்போது கல்யாணப் பலகாரம் அல்லது சீர் பக்ஷணம் கொடுத்து வழியனுப்புவார்கள். நாங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று திரும்பும்போது மறக்காமல் தாய் வீட்டுச் சீதனமாகக் கடையில் வாங்கி வருவது தேங்கா பன். தேங்காய் பன் எனச் சரியாகச் சொன்னால் ஏனோ தூரத்து உறவாகத் தெரிகிறது. அதனால் தேங்கா பன்னாகவே இருக்கட்டும்.

வட்ட வடிவில் இருக்கும் தேங்கா பன்னை பீட்சா முக்கோணங்களாக்கிக் கொள்வதே உண்பதற்கு வசதி. தேங்காய், டூட்டி ப்ரூட்டி என அலங்கரிக்கப்பட்ட பன்னுக்குள் அடங்கியிருக்கிறது உழைக்கும் மனிதருக்கான வாழ்க்கைத் தத்துவம்.

பாலும் சர்க்கரையும் கலந்த மைதா மாவுடன் ஈஸ்ட் சேர்த்து பிசையப்பட்டு உருவான பன் அது. அதைச் சுவைக்க முக்கோண பன்னின் அகலப் பகுதியிலிருந்து தொடங்க வேண்டும். மெதுமெதுவென அளவான இனிப்புடன் இருப்பதே அசல் தேங்கா பன்னின் பதம். இது காய்ந்து போயிருந்தால் அதற்கு மேல் அதை உண்பது வீண்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!