Home » ஹாங்காங்கின் காவலன்
ஆளுமை

ஹாங்காங்கின் காவலன்

டங் சீ

1997 ஜூன் 30, நள்ளிரவு. ஹாங்காங் மாநாட்டு மையத்தில் கனமழை. 155 ஆண்டுகள் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கீழிறங்க, ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடி உயர்ந்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் கண்களை அந்த மேடையில் குவித்திருந்த அந்த நிமிடத்தில், ஒரு மூலையில் அமைதியாக நின்றிருந்தார் ஒரு கப்பல் தொழிலதிபர்.

அதற்கு முன்பு வரை பெரும்பாலான ஹாங்காங்காரர்களுக்கே அதிகம் பரிச்சயமில்லாதவர். அடுத்த சில மணிநேரங்களில் அறுபத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட உலகின் முக்கியமான நிதி மையங்களில் ஒன்றின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர்தான் டங் சீ-வா. 2026 செப்டம்பர் 8 அன்று தன் 89ஆவது வயதில் இவர் மறைந்த செய்தி, அந்த மழை நிறைந்த இரவில் தொடங்கிய ஒரு சிக்கலான, முரண்பாடுகள் நிறைந்த சகாப்தத்தை மீண்டும் நினைவுகூர வைக்கிறது.

கிழக்கும் மேற்கும் சந்திக்கும் நகரமான ஹாங்காங், தென் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் தென் கோடியில், முத்து நதியின் கழிமுகத்தின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது. காலூன் தீபகற்பம் மற்றும் 260க்கும் மேற்பட்ட சிறு தீவுகள் என மொத்தம் 1, 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஹாங்காங் தீவு. மலைப்பாங்கான நிலப்பரப்பில் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இயற்கையான, ஆழமான துறைமுகமே இந்த நூற்றாண்டுகள் கடந்த நகரத்துக்கு அடையாளம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!