‘இப்போதில்லையேல் இனி எப்போதும் இல்லை’ என்று எச்சரித்து, பாகிஸ்தான் என்ற பெயரை முன்மொழிந்தது ஒரு நான்கரை பக்கத் துண்டுப்பிரசுரம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்த சௌத்ரி ரஹமத் அலி 1933இல் எழுதியது. அதில் பஞ்சாப் (P), ஆஃப்கனிஸ்தான் (A), காஷ்மீர் (K), சிந்த் (S), பலூசிஸ்தான் (TAN) ஆகிய மாநிலங்களை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் என்ற தனி நாடாக உருவாக்கக் கோரியிருந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்த மாநாடுகளில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் சமரசம் எட்டப்படவில்லை. தனி வாக்கெடுப்புகள் இந்துக்களுக்கே சாதகமாகும் என்றார் ரஹமத் அலி. சிறுபான்மை இனமான முஸ்லீம்கள் அழிந்து போவார்கள். மதம், சமூகச் சட்டங்கள், உணவு, இலக்கியம் என்று அனைத்திலும் வேறுபடும் எண்பது மில்லியன் முஸ்லீம்களுக்குத் தனி நாடு வேண்டுமென்றார். மத்தியக் கிழக்கு முஸ்லீம்களுக்கும், இந்துக்களின் நாடான இந்தியாவுக்கும் பாகிஸ்தான் பாலமாக இருக்கும் என்றார்.















Interesting to know how the name PAKISTAN was coiined