தீபாவளி பண்டிகைக்கு எங்கே துணியெடுக்கச் செல்லலாம்? இந்த விவாதம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். நடுத்தர, பணக்கார வர்க்கம் என்பதைத் தாண்டி அடிப்படை மக்களுக்கான ஒரு ஷாப்பிங் சென்டர்தான் எம்.சி.ரோடு. சென்னையிலுள்ள பிரபலமான துணிச் சந்தைகளில் எம்.சி.ரோடு முக்கியமான ஒன்று. சில்லறை வியாபாரம் மட்டுமல்ல… மொத்த விற்பனைகளின் சந்தையாகவும் இருக்கிறது.
எம்.சி. சாலைக்குள் நுழையும் போதே கழுத்தை மூடிக் கொள்ளுங்கள், உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற காவல்துறை அறிவிப்போடு தான் உள்ளே நுழைந்தாக வேண்டும். சாலையின் இருபுறமும் துணிகள் முதல் சில்லறைப் பொருள்கள் வரை நடைபாதைக் கடைகள் இருக்கின்றன. கட்டடங்களுக்குள் பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்கள் இருந்தன. இன்னொரு ரங்கநாதன் தெரு இது என்பதில் சந்தேகமில்லை.
Add Comment