Home » மீண்டும் நிலவு, மீண்டும் மனிதன், மீண்டும் நாசா!
விண்வெளி

மீண்டும் நிலவு, மீண்டும் மனிதன், மீண்டும் நாசா!

நிலவுக்குச் செல்வது இனி ஒரு சாதாரண விஷயமாக மாறப்போகிறது. விண்வெளி என்பது ஏதோ எட்டாக்கனி அல்ல, அது நமது அடுத்த ‘வீடு’ என்பதை உரக்கச் சொல்ல வருகிறது ஆர்டெமிஸ் 2 (Artemis 2) திட்டம்.

மனிதன் நிலவைத் தொட வேண்டும் என்ற கனவு இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விண்வெளிப் போட்டியின் தொடக்கமாக, 1957 அக்டோபர் 4 அன்று சோவியத் யூனியன் ‘ஸ்புட்னிக் 1’ என்ற முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.1959இல் ‘லூனா 2’ விண்கலம் நிலவின் மேற்பரப்பைத் தொட்ட முதல் மனிதத் தயாரிப்பாக மாறியது. 1961 ஏப்ரல் 12 அன்று யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த விண்வெளிப் போட்டியில் 1969இல்தான் அமெரிக்கா தன் முத்திரையைப் பதித்தது. 1969 ஜூலை 20 அன்று, Apollo 11 திட்டம் வழியாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் முதல் மனிதக் கால்தடம் பதித்தார். அவரைத் தொடர்ந்து பஸ் ஆல்ட்ரின் இறங்கினார். மைக் காலின்ஸ் விண்கலத்திலேயே இருந்து அவர்களைப் பாதுகாத்தார். அதன் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!