61 நிழல்கள்
நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று.
பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப் பூசிப் பளபளக்கக் கட்டிவைத்துவிட்டுப் போயிருந்த ஒப்பித்தாளின் (ஹாஸ்பிடலின்) பிரம்மாண்டமான தூண்களை இடிக்க வருடக்கணக்கில் எடுத்துக்கொண்டதைக் கண்ணெதிரில் பார்த்ததும் ‘இடிக்கவே வருஷக் கணக்குல எடுக்குதே இப்படி ஒண்ணைக் கட்ட நமக்கு எவ்வளவு வருஷம் எடுக்கும்’ என்று கைத்த சிரிப்புடன் வ.உ.சி பள்ளியின் தமிழாசிரியர் இரா. திருமுருகன் சொன்னது நினைவுக்கு வந்தது.















Add Comment