Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 45
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 45

மன்னிப்பு

ஜாப்ஸ் இல்லாத முதல் வருடம் மிகவும் சவாலாக இருந்தது. புகழும், அது தரும் வெளிச்சமும் டிம் குக்கிற்கு முக்கியமல்ல. தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். ஆனால் ஆப்பிளின் தலைவர் என்றான பின் அவ்வாறிருக்க முடியாது.

ஐபேடின் மூன்றாவது வெர்ஷன் வந்தது. ஆப்பிள் விழாவில் குக் இதை அறிமுகம் செய்தார். ‘இங்கிருப்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி’. குக்கின் உதடுகள் இவ்வாறு பேசின. ஆனால் அவர் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சிக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.

ஜாப்ஸ் நடத்தும் அறிமுக விழாக்கள் கிட்டத்தட்ட ஒரு ராக் ஸ்டார் கான்சர்ட் போன்றவை. ஆப்பிள் அன்பர்கள் இதற்கெல்லாம் பழகிப் போயிருந்தனர். குக் வேறு ரகம்.

தனது தோற்றத்தில் ஜாப்ஸ் மிகவும் அக்கறையாக இருப்பார். குக் அணிந்திருந்த உடைகள் சாதாரணமானவையாக இருந்தன. தன்னளவில் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ஆனால் கூட்டங்கள் உள்ளத்தைக் காண்பதில்லை. அவற்றுக்கு அரிதாரம் அவசியம். முக பாவனைகள் முக்கியம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!