உலக வரலாற்றின் போக்கையே திசை மாற்றிய ரஷ்ய உக்ரைன் போர், உலக அமைதிக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போர் தற்போது நான்கு ஆண்டுகளைத் தாண்டி ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று பெயரிட்டு உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.சில நாட்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல், ஆண்டுகளைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கும் நீண்டகால யுத்தமாக மாறி நிற்கிறது.
உக்ரைனின் தலைநகர் கீவ்வின் தெருக்களில் குண்டுகள் விழுந்தன. மரியூபோல் நகரம் சாம்பலானது. லட்சக்கணக்கான உக்ரேனியர்கள் அகதிகளானார்கள். ஆனால் இந்தப் போர் வெறும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தமாக மட்டும் இல்லை.
வடகொரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷ்யாவுக்காகப் போரிட அனுப்பப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் இதை விட மனதை உலுக்கும் ஓர் உண்மை சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த யுத்தம் உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் தொலைதூர நாடுகளின் இளைஞர்களை விழுங்கி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் ஏழை இளைஞர்கள், வேலைவாய்ப்புக் கனவுடன் ரஷ்யாவுக்குச் சென்று எதிர்பாராதவிதமாகப் போர்க்களத்தின் நெருப்பில் தள்ளப்படுகின்றனர்.















Add Comment