Home » தேன், இசை, தென்றல் மற்றும் தேவா
வெள்ளித்திரை

தேன், இசை, தென்றல் மற்றும் தேவா

இசையமைப்பாளர் தேவா

‘சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே!
சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து ஆடுதே!!
வாராரு வாராரு அழகர் வாராரு…’

சித்திரைத் திருவிழாவின்போது மதுரையில் இந்தப் பாடல் ஒலிக்காத மண்டகப்படிகள், தெருக்கள் கிடையாது. அழகர் வருகையை அறிவிக்கும் இந்தப் பாடல் வந்தாலே மக்கள் உற்சாகம் ஆகிவிடுவார்கள். ஒரு மிகப்பெரிய திருவிழாவின் அடையாளமாக மாறி நிற்கும் அந்தத் திரைப் பாடலைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.

பிரபல இசையமைப்பாளரும் ‘தேனிசைத் தென்றல்’ என்று அறியப்பட்டவருமான தேவா காலமானார். அக்டோபர் 17 சனிக்கிழமையன்று காலை உடல்நிலை சரியின்றி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ‘வரும்போதே இதயத் துடிப்பு இல்லை. உடனடி முதலுதவி செய்யப்பட்டது. தொண்ணூறு நிமிடப் போராட்டத்துக்குப் பிறகும் அவருடைய இதயத் துடிப்பை மீட்டு உயிர்ப்பிக்க முடியவில்லை’ என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினர்.

தேவநேசன் சொக்கலிங்கம் என்கிற தேவா, தமிழ்த் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத பெயர். தனக்கென்று ஒரு பாணி, தனியிடம், பாடல்கள் என்று வலம் வந்தவர். 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபதாம் தேதி பிறந்தார். பெற்றோர் பெயர் எம். சி. சொக்கலிங்கம் – கிருஷ்ணவேணி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!