காஸாவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தி வரும் இனப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர, அங்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்னும் இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக ஐநாவின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனம் என்ற நாடே இருக்கக்கூடாது என்னும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஐநா சபையில் பிரான்ஸும், சவுதி அரேபியாவும் சேர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்னும் இருநாடுகள் தீர்வை முன்மொழிந்தன. அதற்கான வாக்கெடுப்பு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஐநா சபையின் 193 உறுப்பு நாடுகளில் 142 நாட்டுப் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா உள்ளிட்ட பத்து நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் பெரும்பான்மை உலக நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஸாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் கொடூரப் போரில் தாக்குதல்களிலும், செயற்கைப் பஞ்சம் பட்டினியாலும் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் உடைமைகளை, சொந்தங்களை, வாழ்விடங்களை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஆனாலும் இந்தப் போருக்கு ஒரு முடிவு இதுவரை எட்டப்படவில்லை.















Very sad..!