Home » வரியும் வாழ்க்கையும்
நம் குரல்

வரியும் வாழ்க்கையும்

இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐம்பது சதவீதமாகச் சமீபத்தில் உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு. இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதற்கு முன்னர் வரி இருபத்தைந்து சதவிகிதமாக இருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் விலை அதிகரித்திருக்கிறது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் பெரும் சுமையை ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றன.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதன் மூலமாக உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷ்யாவுக்கு உதவுகிறது என்பது அமெரிக்கா தெரிவித்திருக்கும் நொண்டிச்சாக்கு. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், தன்னிச்சையாகப் பிற நாடுகளின் வரியை உயர்த்தியதை அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் சட்ட விரோதம் எனச் சொல்லியிருக்கிறது. அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசநலனுக்காகச் செய்திருக்கும் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது டிரம்ப் தரப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!