ஏஐ மருத்துவம் – நல்லதா, கெட்டதா?
சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோரில் நான்கில் ஒருவர் ஆரோக்கியம் தொடர்பாக வாரத்துக்கு ஒரு கேள்வியைக் கேட்கிறாராம். ஒரு நாளில் சுமார் நான்கு கோடி பயனர்கள் தங்கள் உடல்நலனைப் பற்றிச் செய்யறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்களாம். இந்தப் போக்கு நல்லதா கெட்டதா?
பொதுவாக, உலகம் முழுவதும் மருத்துவர்களுக்கு நேரம் இருக்காது. ஒவ்வொரு நோயாளியின் பிரச்சினையும் வித்தியாசமாக இருக்கும். அதனால் அவர்களால் விரிவான அறிக்கைகளை எழுதுவதிலும், அவற்றைப் புரியும்படி எழுதுவதிலும் செலவிட முடியாது.
இந்தப் பிரச்சினையைச் செய்யறிவு எளிதாகத் தீர்ப்பதாக நியூயார்க் NYU லங்கோன் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஆய்வு சொல்கிறது. மருத்துவர்கள் குறியீடாக, சுருக்கமாக எழுதினால், அதை நோயாளிக்குப் புரியும்படி எளிமைப்படுத்தி சாட்ஜிபிடி எழுதிக் கொடுக்கிறது.
அடுத்து பார்க்கப் போவதும் மருத்துவர்களின் நேரமின்மைக்குத் தொடர்பானதே. நோயாளி வலியோடும் பயத்தோடும் வருவார். ஒரே கேள்வியையே பலமுறை கேட்பார். ஒவ்வொரு நாளும் இதேபோலப் பலரைப் பார்க்கும் மருத்துவர் பொறுமையாக மீண்டும் மீண்டும் பதில் சொல்வது கடினம்.















Add Comment