கடந்த ஜூலை முதல், ஏர்டெல் பயனாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி புரோவை ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குகிறது பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம். இதைத் தொடர்ந்து கூகுளும், ஜியோ சிம் உபயோகிக்கும் அனைவருக்கும் பதினெட்டு மாதங்கள் ஜெமினி புரோவைக் கட்டணமின்றி வழங்க இருக்கிறது. ஓப்பன் ஏஐ தனது சாட்ஜிபிடி கோ சேவையை அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வருடம் இலவசமென அறிவித்திருக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர், இவற்றின் வரையறுக்கப்பட்ட இலவசச் சேவையை ஏற்கெனவே உபயோகிக்கிறோம். இவை நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாகவே கிட்டத்தட்ட மாறிவிட்டன. இந்த நிலையில், இவற்றின் புரோ வெர்ஷன்கள் நமக்கு இன்னும் நிறைய வசதிகளை அளவில்லாமல் அளிக்கும்.
லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் (LLMs) நம் இணையப் பயன்பாட்டைப் பெருமளவு மாற்றியிருக்கின்றன. முன்பு போல ஒரு தேடுபொறியில் தேடி, அதில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு பக்கமாகச் சென்று கொண்டிருக்கத் தேவையில்லை. இந்த மாடல்கள் நாம் கேட்டதைத் துல்லியமாகவும், அளவாகவும், அனைத்துத் தரவுகளுடனும் கொட்டிவிடுகின்றன. அங்கிருந்து மேலும் மேலும் என அவற்றுடன் உரையாடி நம் தேடலை இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.















டேடா திருடுதல் பற்றியும் கூறுக உ. மெடா பயணர் இது பற்றி புகார் அளித்துள்ளனர் ஏன் எப்படி என்ற விவரம் பயனுள்ளதாகிறது
விஸ்வநாதன்