பதினைந்து லட்சம் கிலோமீட்டர். கற்பனை செய்து பார்ப்பதற்கே கடினமான தூரம். இதென்ன உலகெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளின் தூரமா என்றால் இல்லை.
கடலடியில் இருக்கும் கேபிள்களின் நீளம். கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நெட்வொர்க். அங்கு எதற்கு இந்தக் கேபிள்கள்? இவை செய்யும் பணிகள் யாவை?
இணையம் ஓர் உலகளாவிய வலைப்பின்னல். யாவரும் அறிந்த உண்மை. உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் கணினியையும் எளிதில் அணுக வழி செய்கிறது.
இவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்டுவதற்கு அடிப்படையாக இருப்பவை இந்தக் கேபிள்கள்.
கேபிள் என்றவுடன் நம் வீட்டிற்கு வரும் கேபிள் டிவியின் வயர் என்று எண்ணிவிடாதீர்கள். இவை பைபர் ஆப்டிக்ஸ் கேபிள்கள்.















Add Comment