Home » பனிப் புயல் – 18
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 18

18. ஏமாற்றப்பட்ட சுவர்கள்

தவறை மூடிமறைக்கும் பழக்கம் ரஷ்யாவின் பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒன்று. குர்ஸ்க் நீர்மூழ்கிக்கு ஏற்பட்ட விபத்தைப் போலவே ரஷ்யாவின் அவலநிலையையும் தொடர்ந்து மறைத்தார்கள்.

பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார் புதின். அவை நடந்த தெருக்களில் இருந்த கட்டடங்கள் அவசர அவசரமாக அரை அலங்கார நிலையடைந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அந்தச் சுவர்களுக்கு அப்போதுதான் வெள்ளையடிக்கப்பட்டது. சுவர் முழுவதற்கும் அல்ல. கார் கண்ணாடியை இறக்கி வெளியே பார்க்கும்போது, சுவர் எவ்வளவு உயரத்துக்குத் தெரியுமோ அந்த உயரம் வரைதான் வெள்ளையடிக்கப்படும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அந்தந்தத் தளங்களில் குடியிருப்போர் செய்த புண்ணியத்துக்கேற்ப அவை அழகு பெறும். ஒரு சாமானியனின் சுவர் வெள்ளையானாலே அத்தெரு வழியாக புதின் குடும்பத்தார் வரப்போகிறார்கள் என்று மக்கள் புரிந்துகொண்டார்கள்.

பல சாலைகளும் இதிலடங்கும். குண்டும் குழியுமான சாலைகளுக்குள் இறங்கி வெள்ளை பெயிண்ட் அடித்து வைப்பார்கள். புதினின் ஹெலிகாப்டர் பயணத்தின்போது வெள்ளை நிறத்தில் அவை அழகாகத் தெரியும். அதில் நடப்பவர்களைப் பற்றி யாருக்கென்ன கவலை? அதிகாரிகள் நல்ல பெயர் வாங்க வேண்டும். அது ஒன்றே முக்கியம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!