Home » பனிப் புயல் – 27
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 27

27 – வாக்காளர்களை விஞ்சிய வாக்குகள்

26-ஜூலை-2004.

உக்ரைன் அதிபர் லியனீட் கூச்மாவைச் சந்திக்கச் சென்றார் அதிபர் புதின். உக்ரைன் தேர்தலை ஒட்டிய பயணம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை ஏற்கெனவே நேட்டோவுக்குப் பறிகொடுத்துவிட்டது ரஷ்யா. பனிப்போரில் அமெரிக்காவின் வெற்றியை இது உறுதி செய்தது.

சோவியத் நாடுகளில் ரஷ்யாவுக்கு அடுத்து பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருந்தது உக்ரைன். மேற்குலகோடு இணையாமல் அதைத் தக்கவைத்துக் கொள்வது ரஷ்யாவுக்கு முக்கியம். நேட்டோவின் ராணுவத்தை ரஷ்யாவின் வாயிற்படியில் அனுமதிக்க முடியாது. உக்ரைனுடன் ரஷ்யா போர் தொடங்கியதன் ஆரம்பக்கால வரலாறு இது.

உக்ரைனின் பூகோள அமைப்பைச் சார்ந்தே அதன் மக்களின் மனநிலையும் இருந்தது. ரஷ்யாவுக்கு அருகிலிருந்த தென்கிழக்கு உக்ரைனியர்கள் ரஷ்யாவுடன் நட்பிலிருப்பதை ஆதரித்தார்கள். அப்போதைய பிரதமர் விக்டர் யனுகோவிச் அப்பகுதியிலிருந்து வந்தவர். அவரது நிர்வாகத்தைப் புகழ்ந்து தள்ளிய புதின், அவர் அதிபராவதை ஆதரித்தார். அந்த வருடத்தில் மட்டும் ஐந்து முறை உக்ரைனுக்குச் சென்றார் புதின். கடவுச்சீட்டு இல்லாமல் உக்ரைனியர்கள் ரஷ்யாவுக்குப் பயணம் செய்யலாம், இருநாட்டுக் குடியுரிமையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!