இரானின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கிறது கெஷ்ம் (Qeshm) தீவு. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல சிறப்பான இடங்களைக் கொண்டது.
இத்தீவு ‘திறந்தவெளிப் புவியியல் அருங்காட்சியகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்திருக்கிற புவியியல் பூங்கா, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. பல லட்சம் வருடங்களாக நிகழ்ந்த இயற்கையான மாற்றங்களால் உருவான பள்ளத்தாக்குகள், உப்புச் சுரங்கங்கள் இங்கு அமைந்திருக்கின்றன.
உலகின் மிக நீளமான உப்புச் சுரங்கங்களில் ஒன்றான, ஆறு கிமீ நீளமுள்ள நமக்டன் சுரங்கம் இங்குதான் உள்ளது. இங்கு பல சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. இங்கு வலசை வரும் பறவைகளைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
இத்தனை அழகான தீவு, சில வாரங்களுக்கு முன் சட்டெனத் தன் முகத்தை மாற்றிக் கொண்டது. ஒட்டுமொத்த உலகின் கழுத்தை நெறிப்பதற்கும் இந்தத் தீவைத்தான் இரான் பயன்படுத்திக் கொண்டது.















Add Comment