அங்காளம்மன்
மலையரசன் கோட்டையின் அரண்மனைக் கதவுகள் தாமாகத் திறந்தன. பாம்புகள் ஊர்ந்து உள்ளே நுழைந்தன. இரவுக் காவலர்கள் தூண்களில் ஏறிக் கை கால்களைப் பிணைத்துக் கொண்டார்கள்.
மலையரசனின் பள்ளியறை ஜன்னல் திரை கீழிறங்கியது. அதில் ரத்த நிறத்தில் ஒரு வாசகம் தோன்றியது.
‘நந்தவனத்துக்கு வா.’
அரசன் வாளுடன் வெளியேறினான். நந்தவனத்தில் அங்காளம்மன் புற்றின் மீது அமர்ந்திருந்தாள். அவளுக்கு நூறடி முன்னால் குதிரையை நிறுத்தினான்.
இப்போதுதான் முதல் முறையாக அங்காளம்மனை நேரில் பார்க்கிறான். கடந்த அமாவாசை இரவில் தோட்டக்காரன் திமிலன் பார்த்திருக்கிறான். அப்போதிருந்து மலையரசனால் வேறு எந்தப் பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அங்காளம்மன் அவ்வளவு அலைக்கழித்தாள்.















Add Comment