2016ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சோலிலுள்ள கங்நம் நிலத்தடி ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த யுனிசெக்ஸ் கழிப்பறையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். பெண்கள் தன்னைத் தொடர்ந்து புறக்கணித்ததால் கொலை செய்ததாகக் கொலையாளி வாக்குமூலம் அளித்தது அதிர்வை ஏற்படுத்தியது.
ஆரம்பம் அதுதான். இன்று 4B என்னும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது.
தென்கொரியாவில் தீவிரப் பெண்ணியவாதிகள் முன்னெடுத்த புறக்கணிப்புப் போராட்டம் 4B இயக்கம் (4B movement). திருமணம், குழந்தைப் பிறப்பு, காதல் மற்றும் பாலுறவு எனப் பெண்கள் மீது சமூகம் வைத்திருக்கும் நான்கு அடிப்படை எதிர்பார்ப்புகளை இவ்வியக்கம் மறுக்கிறது. ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பை நிராகரிக்கும் ஒரு தீவிர நிலைப்பாடு.
2016 இல் நடைபெற்ற அந்தக் கொலை ஒரு தனிப்பட்ட குற்றமாகப் பார்க்கப்படவில்லை. அது பெண் வெறுப்புக் குற்றமாக (Misogyny) பலராலும் அடையாளப்படுத்தப்பட்டது. அச்சூழலில் 4B இயக்கம் பெண்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை முறையை முன்மொழிந்தது.
கொரிய மொழியில் B என்ற முன்னொட்டுக்கு ‘இல்லை’ என்று பொருள். 4B என்பது நான்கு விஷயங்கள் இல்லை என்று அர்த்தம்.















Add Comment