அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்குப் பல கனவுகள் உண்டு. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது, பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, மேற்கு அரைக்கோள நாடுகள் அனைத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்துவது, அதை அப்படியே உலகம்...
Tag - உலகம்
இந்தோனேசியாவில் உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் காலம் கிட்டத்தட்ட 67,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணித்திருக்கிறார்கள். பழங்காலக் குகை மற்றும் பாறை ஓவியங்களின் வயதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? இவற்றின் மூலம் நம் நவீன மனம் அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள்...
சீனாவின் பிறப்பு விகிதம் (Fertility rate) வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற ஆண்டின் பிறப்பு விகித எண்ணிக்கை 79.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மாறாக, சீனாவின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு எட்டு என உயர்ந்துள்ளது. பிறப்பு விகிதங்களை...
எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர். மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும்...
‘நீ ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?’என்று கேட்டால் அது ’96 திரைப்படத்தில் வரும் ஜானு. ‘நீ செத்து போயிட்டியா ராம்?’ என்று கேட்டால் அது சீனாவின் செயலி. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தவறாமல் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது சீனாவின் Are You Dead? செயலி. மங்கலகரமான இந்தப்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
இரானில் கடந்த பதினேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரானின் நாணயமான ரியாலின் (Rial) மதிப்புச் சரிவு காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அந்நாட்டின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை அகற்றுவதற்கான உள்நாட்டுக் கலவரமாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்புப் படையினர்...
வெனிசுவேலாவை ‘மிராஃப்ளோரேஸ்’ அரண்மனையிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல் அவரை ஒரு நள்ளிரவில் சிறைபிடித்து வந்தது அமெரிக்க அரசு. கூடவே அவரது மனைவி சீலியா ஃப்ளோரெஸ்ஸும் கைது செய்யப்பட்டார். இப்போது இருவரும் நியூயார்க் நகரின்...
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...
ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post...













