கொரோனா பெருந்தொற்று இரண்டாண்டுகள் உலகையே உலுக்கிப் போட்ட சமயம்… சென்னையின் ஓர் ஓரத்தில் (இரத்தப்பரி)சோதனைகளையே சாதனையாக செய்து கொண்டு அமைதியாக அமைந்திருந்தது கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் என்னும் சோதனைச் சாலை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிய, புல்லுக்குப் பொசிகிற நீர் போன்று இந்த கிங்ஸ்...
Tag - சென்னை
‘இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமதிஸ்ட் உணவகத்தின், குறிஞ்சித் திருவிழாவிற்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் உணவு முறைகளை, நகர மக்களுக்கும் அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம். உணவின் வரலாற்றையும்...
சென்னை ராயபுரம் அருகில் உள்ள கடற்கரைப் பகுதி காசிமேடு. தமிழ்நாட்டின் மீன் சந்தைகளுள் புகழ்பெற்ற சந்தை இது. இங்கிருந்து கேரளா, பெங்களூரு மட்டுமல்ல… வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதியாகின்றன. 1856-இல் முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. முதல் ரயில் நிலையத்தை ராயபுரத்தில் திறந்தனர். வியாபார...
47வது சென்னை புத்தகக் காட்சியை 03-01-2024 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அரங்க மேடையில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் நிதியைக் கொண்ட விருது அது. இதில் உரைநடைக்காக பேராசிரியர்.ஆர்.சிவசுப்ரமணியனுக்கு பதிலாக ரத்தினசபாபதி பெற்றார்...
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம். அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும்...
சென்னையில் எத்தனை மூத்த பஜார்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மூத்த முன்னோடி மூர் மார்க்கெட். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள அல்லிக்குளம் வணிக வளாகம் தான் பழைய மூர் மார்க்கெட். எந்த மாவட்டத்தில் வசித்தாலும் இந்த மார்க்கெட்டை அறியாமல் மாணவப் பருவத்தைக் கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் பல்வேறு...
சென்னையின் பழமையான சந்தைகளுள் ஒன்று ஜாம் பஜார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ”ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு” என்ற மனோரமாவின் பாடல் உங்கள் நினைவிற்கு வருகிறதுதானே..? அதை முணுமுணுத்துக்கொண்டே வாருங்கள்… ஜாம் பஜாரைச் சுற்றிப் பார்ப்போம். திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அமைந்துள்ளது...
ஆர்மேனியன் தெரு என்றும் அரண்மனைக்காரன் தெரு என்றும் அழைக்கப்படும் ஒரு வணிக வீதி சென்னையில் இருக்கிறது. இது ஜார்ஜ் டவுனின் பழமையான வணிகத் தெருக்களில் ஒன்று. ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தெருவில் தங்கி வியாபாரம் செய்துள்ளனர். எனவே இதற்கு ஆர்மீனியன் தெரு என்று பெயர் வந்திருக்கிறது. மலேசியாவின்...
சரித்திரத்தை முகர்ந்தபடி சமகால வீதிகளுக்குள் நுழைவது ஓர் அனுபவம். எத்தனையோ வீதிகள், எவ்வளவோ சந்தைகள், ஆயிரமாயிரம் கதைகள். வீதிகளின் பெயர்களிலேயே அடையாளத்தைப் புதைத்து வைப்பார்கள் முன்னோர்கள். பவழக்கார வீதி முன்னொரு காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? மலை...
மக்கள் நெரிசலில் திணறும் பாண்டி பஜார் தற்போது அயலக மங்கை போல் நவநாகரிக அவதாரம் எடுத்திருக்கிறது. அழகுபடுத்தப்பட்ட செல்வச் சீமாட்டி போல் இருக்கிறது. காரணம் சாலையின் இருமருங்கிலும் உயிர்ப்போடு இருக்கும் பெரிய பெரிய மரங்களும், அதையொட்டிய அகன்ற நடை பாதையும்தான். அங்கிருந்த கடைகளை அகற்றிவிட்டு...














