புரட்சி என்றொரு சொல் நம் மனதில் எழுப்பும் பிம்பங்கள் பெருமளவில் ஏன் ஆணுருவங்களாகவே இருக்கின்றன? வரலாற்றின் பக்கங்களில் புரட்சிக்கும் பெண்களுக்கும் தொடர்பெதுவும் இல்லையா? இவ்வாறான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த மகளிர் தினத்தில் விடைதேடுவோம். புரட்சி என்பது ஒரு தினசரி நிகழ்வல்ல. வாழும்சூழல்...
Tag - பெண்கள்
புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு...
இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...
தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...
`காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்றபோது காத்துவாங்கும் உடையெதுக்கு` என்பது தொண்ணூறுகளின் மத்தியில் வந்த ஹிட் பாடலின் வரி. பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது பலகாலம் வரையில் சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஆட்பட்டே இருந்திருக்கிறது. உடலை மறைப்பதைவிட உள்ளிருக்கும் ஆளைக் காட்டுவதே பேஷன் என்கிறது இப்போதைய...
ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை...
ஆப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதல் இப்பொழுதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. முடிந்தவரை பெண்களுக்கு எதிராகச் சாத்தியமுள்ள அனைத்து தடைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்தது பாவம் என்பதுவரை மக்கள் நினைத்து வருந்திவிட்டார்கள். இனி புதிதாகச்...
மார்ச் மாதம் சவூதியைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரெய்யனா பர்னாவி என்னும் பெண், விண்வெளிக்குச் சென்றார். அது அல்ல செய்தி. 1967 ஆம் ஆண்டு உலகத்துக்கே முன்னோடியாக ரஷ்ய நாட்டுப் பெண் வேலண்டினா விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பின் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பர்னாவி...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...














