‘G இன்றி அமையாது உலகு’, புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரியில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாக அமைந்த நற்செய்தியுடன் 2025ஆம் வருடம் பிறந்தது. இப்போது வருட இறுதியில் மயல் விற்பனையிலும் விமர்சனத்திலும் பெயர் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்த இரண்டு இனிப்பான செய்திகளினூடே செயல் சேர்த்து...
Tag - ஆண்டறிக்கை
2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ‘நான் ஓர் எழுத்தாளர்’ என்ற நினைப்பு எனக்குத் துளியும் எட்டிப் பார்த்ததில்லை. இதோ ஆண்டின் இறுதியில் என்னுடைய முப்பத்து இரண்டு கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியாகியுள்ள விந்தை நிகழ்ந்துள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றியே இவ்வருடத் தொடக்கத்தில்...
ஆண்டு, உற்சாகத்தோடுதான் பிறந்தது. ஜனவரி முதல் வாரத்திலேயே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘உயிரினங்களின் மொழி’ தொடரை எழுதத் தொடங்கினேன். எழுத்துக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை வாசிப்புக்கும் தர வேண்டும் எனத் தீர்மானித்தேன். அந்தப் பயணம் அசோகமித்திரனிடமிருந்து தொடங்கியது...
எனது எழுத்துப் பயணம் மெட்ராஸ் பேப்பரில் 2024இல் ஆரம்பித்தது. அந்த வருட ஆண்டறிக்கையில் இரண்டு முக்கிய இலக்குகளைப் பதிவிட்டிருந்தேன். ஒன்று, ஒரு புத்தகம் எழுதி முடிக்க வேண்டும். இரண்டாவது, மெட்ராஸ் பேப்பரில் என் கட்டுரையின் தரம் உயர வேண்டும். முதல் இலக்கை 2024 முடிவதற்கு முன்னரே முடித்து, புத்தகத்தை...
இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப் பலனளிப்பதில்லை. வாசிப்பும் உடற்பயிற்சியும் மட்டுமே பலனளிக்கும். காதல் தோல்வியினால் ஏற்படும் மன வலியைவிடத் தலைவலியும் பல் வலியும் கொடுமையானது என்பார்கள்...
இலக்கை முடிக்கும் வரை போராடுவது எனக்குப் பிடிக்கும். அதன் பின்னர் எதற்கும் அசையாமல் ஓய்வெடுப்பதும் பிடிக்கும். பார்பெக்யூ உணவகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்தையும் உண்பது, பின்பு வீட்டுக்குச் சென்று கண்களை மூடி தியான உலகுக்கு நிலைபெயர்வதை உதாரணமாகச் சொல்லலாம். எனது வேலைகளையும் எழுத்தையும்...
முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில் எழுதத் தொடங்கினேன். கொடுத்த தலைப்புக்கேற்பத் தோன்றுவதைக் கிறுக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு விடயம் பிடிபட்டது. எழுதுவது எனக்குப்...
2025ஆம் ஆண்டில் எழுத்து சார்ந்து அடைய வேண்டியவை என்று சில இலக்குகளைச் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 1. இரண்டு அல்புனைவுப் புத்தகங்கள் 2. ஒரு நாவல் 3. சில சிறு கதைகள் 4. சென்ற ஆண்டு ஆரம்பித்த சிறுகதைத் தொகுப்பு வேலைகளை முடித்தல் 5. நிறையவே வாசித்தல். இவற்றை அடைந்தேனா என்று...
பிப்ரவரி 22, 2025. நீங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதத் தொடங்கலாம் என்று ஆசிரியர் பா.ராகவனிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. அச்செய்தியைக் கேட்ட போது இருந்த இடம், சூழல், மன உணர்வை இப்போதும் நினைவுகூர முடிகிறது. பெரும்பாக்கம் கிரிக்கெட் லீக்கின் செமி ஃபைனல் ஆட்டம். டாஸ் வென்ற எங்கள் அணி...
பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது. இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல்...












