Home » ஸ்டீவ் ஜாப்ஸ் » Page 5

Tag - ஸ்டீவ் ஜாப்ஸ்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 13

யார் லிசா? ஆப்பிளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது. ஆப்பிள் II கம்ப்யூட்டருக்கான ஆர்டர்கள் தொய்வின்றி வந்துகொண்டிருந்தன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஏழாம் ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து ஐநூறு கம்ப்யூட்டர்களை விற்றது ஆப்பிள். அன்றைய சூழலில் இத்தனை கம்ப்யூட்டர்கள் விற்பது என்பதே ஒரு சாதனை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 12

ஆடுகளம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு முகம் உண்டு. ஆனால் முகம் மட்டுமே உடல் அல்ல. ஆப்பிளின் முகம் ஜாப்ஸ். அவரது உழைப்பு சிறப்பானது. ஆனால் அவர் மட்டுமே ஆப்பிள் அல்ல. ஆப்பிள் இன்றிருக்கும் உச்சத்திற்கு வரப் பலரும் துணையாக இருந்துள்ளனர். சென்ற அத்தியாயத்தில் மர்க்குலா ஆப்பிளின் வளர்ச்சிக்கு...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 11

ஆப்பிள் என்றொரு யானை மர்க்குலாவின் திட்டம் தயார். எழுதி வைத்துவிட்டால் மட்டும் போதுமா? அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் பணியில் இறங்கினர். மர்க்குலாவும் ஜாப்ஸும் இதில் மும்முரமாக இருந்தனர். மர்க்குலாவின் திட்டப்படி, ஆப்பிள் குறித்து மக்களிடையே நல்லதொரு இமேஜை உருவாக்க வேண்டும். இதைத் தாங்கள் மட்டுமே...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 10

மூன்றடுக்கு ரகசியம் ஜாப்ஸ் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருந்தார். வாஸ் முழுநேரமாக ஆப்பிளுக்கு வந்துவிட்டது தான் காரணம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாஸ் ஒன்றை மட்டும் ஜாப்ஸிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘என் கடன் சர்க்யூட் செய்து கிடப்பதுவே’ என்பதுதான் அது. தனக்கு நிறுவனத்தை மேய்க்கும்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 9

09. மர்க்குலா வாஸின் சர்க்யூட் டிசைன் தயார். ஜாப்ஸ் தனது கோணத்தில் ஒவ்வொரு பாகத்தையும் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிலவற்றை மாற்றியமைக்கலாம் என்று எண்ணினார் ஜாப்ஸ். வாஸை அழைத்தார். இன்னும் ஒரு விவாதம் தொடங்கியது. ஆப்பிளை மேம்படுத்துவதே நோக்கம். நீயா, நானா என்று வாதிடுவது அல்ல...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 8

ஊடல் ஆப்பிள் கம்ப்யூட்டரின் முதல் அவதாரம் முழுமையானது அல்ல. அதைக் கடையிலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து அப்படியே பயன்படுத்த இயலாது. துறை சார்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் கம்ப்யூட்டர்கள் குறித்த எதுவுமே தெரியாதவர்களுக்கு இது ஒரு பெருஞ்சிக்கல். கம்ப்யூட்டர் திருவிழாவில்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 7

ஆப்பிளின் முதன் வெர்ஷனிலேயே அவர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தனர். அது பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டும்.

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 6

ஆப்பிள் நிறுவனத்தில் அவரது பங்கு பத்து சதவீதம். அதற்கென அவர் பெற்றுக்கொண்டது எண்ணூறு டாலர். 2012ஆம்ஆண்டில் அந்தப் பத்து சதவீதத்தின் மதிப்பு ஐம்பத்து நான்கு பில்லியன் டாலர்.

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 5

இது விற்குமா? யார் வாங்குவார்கள்? விற்றாலும் நமக்கு லாபம் வருமா? வாஸின் மனத்தில் அடுக்கடுக்கான கேள்விகள். இவை எதற்குமே ஜாப்ஸ் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 4

புளூ பாக்ஸ் விற்பனை என்பது கம்ப்யூட்டர் விற்பது போலல்ல. ஆபத்தானது. மாட்டிக்கொண்டால் தண்டனைதான். ஒரு முறை முன்பின் தெரியாத ஒருவரிடம் புளூ பாக்ஸ் விற்கப் போக இருவரும் மாட்டிக்கொண்டனர்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!